கஜா புயல் பாதிப்பு: பிரதமரை சந்தித்து ரூ. 15,000 கோடி நிவாரண நிதி கேட்டார் எடப்பாடி பழனிசாமி
புயல் பாதிப்பை ஆய்வு செய்ய மத்திய குழு தமிழகம் வருகை
பிரதமர் உடனடியாக புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை
தமிழக டெல்டா மாவட்டங்களில் அடுத்த மூன்று நாட்களுக்கு மலை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்
சபரிமலையில் பெண்கள் தரிசனத்திற்கு தனியாக 2 நாட்கள் ஒதுக்க கேரள உய்ரநீதிமன்றத்திற்கு கேரள அரசு பரிந்துரை
சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்டது ஆட்டிறைச்சி தான் நாய்கறி இல்லை, ஆய்வு முடிவில் தகவல்
இன்னும் எந்த கட்சியுடனும் கூட்டணி முடிவு செய்யவில்லை, திமுக பொருளாளர் துரைமுருகன் பேட்டி
வெடிகுண்டு இருப்பதாக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு தொலைபேசி அழைப்பு, காவல்த்துறை ஆய்வில் போலி அழைப்பு என்று தகவல்
உடான் திட்டத்தின்கீழ் காரைக்குடியில் உள்நாட்டு விமான நிலையம் அமைக்க விமான போக்குவரத்துத்துறை திட்டம்
திருச்சி அரசு கால்நடை மருத்துவமனையில் மற்ற அரசு மருத்துவமனைகளைவிட நல்ல முறையில் சேவை
தீண்டத்தகாதவர்கள் கோவில்களுக்கு செல்ல ஆரம்பித்தபோது என்ன எதிர்ப்பு வந்ததோ அதே எதிர்ப்பு தான் இப்போது சபரிமலை விவகாரத்தில் வந்துள்ளது. இந்த நிலை மாறும்
தோல்வி பயம் காரணமாக அதிமுக, பாஜக நடிகர்கள் அரசியலுக்கு வருவதை எதிர்க்கிறார்கள். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லுவதற்கு முன்னால் எம்ஜிஆர், ஜெயலலிதா இருவரும் திரைப்பட நடிகர்கள் தான் என்பதை அதிமுக நினைவில் வைக்க வேண்டும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழு பார்வையிட்டது
இளைஞர்கள் மற்றும் சமூக அர்வலர்கள் உதவினால் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் முழுவதும் சென்றடைகின்றன
புயல் நிவாரண நிதியாக ரூ. 40 லட்சம் கொடுத்தார் நடிகர் விஜய்
திருச்சியில் பள்ளி, கல்லூரிகள் புயல் பாதித்த பகுத்திகளுக்கு நிவாரண உதவிகள் வழங்கின
புயல் பாதித்த பகுதிகளை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் பார்வையிட்டார்
புயல் பாதித்த மாவட்டங்களுக்கு மக்கள் நீதி மய்யம் ரூ. 2 கோடி நிவாரண பொருட்கள் கமல் ஹாசனால் வழங்கப்பட்டன.
புயல் பாதித்த பகுதிகளில் அரசு இன்னும் வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும். அரசு சார்பில் இன்னும் பல கிராமங்களில் உதவி செய்யப்படவில்லை. சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள், மற்ற கட்சிகள் தான் அரசு அதிகாரிகள் செல்ல முடியாத பகுதிகளுக்கு சென்று உதவி செய்தன என்று கமல் ஹாசன் பேட்டி